ரூ. 15.36 லட்சம் ஆரம்ப விலையில் புதிய Toyota Innova Crysta BS6 கார் விற்பனைக்கு அறிமுகம்

புதிய இன்னோவா கிறிஸ்டா கார்



இந்தியாவிலுள்ள ஆட்டோத்துறை ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்த்து வரும் புதிய பிஎஸ்-6 டொயோட்டா கிறிஸ்டா கார் ரூ. 15.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் இந்திய லைன்-அப்பில் இன்னோவா கிறிஸ்டாவுக்கு தனி இடம் உள்ளது. வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து, அவ்வப்போது இந்த காரை டொயோட்டா நிறுவனம் அப்டேட் செய்து விற்பனைக்கு வழங்கி வருகிறது.


புதிய மாசு உமிழ்வு எஞ்சின்



வரும் ஏப்ரல் 1 முதல், புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இதற்காக பல்வேறு நிறுவனங்கள் புதிய விதிகளின் கீழ் வாகனங்களை தயாரிப்பதில் மும்முரமாகி உள்ளன. நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பல ஏற்கனவே பிஎஸ்-6 வாகனங்களை அடுத்தடுத்து விற்பனைக்கு கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் புதியதாக இணைந்துள்ள டொயோட்டா நிறுவனம், புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இன்னோவா கிறிஸ்டா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. எஞ்சினின் தரம் மட்டுமில்லாமல், காரிலுள்ள பல்வேறு கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.