முந்தைய மாடலை விட பிஎஸ்-6 இன்னோவா பெட்ரோல் கிறிஸ்டா கார் ரூ. 11 ஆயிரம் முதல் ரூ. 43 ஆயிரம் வரை விலை உயர்வை சந்தித்துள்ளன. அதேபோல இதனுடைய டீசல் வேரியன்டுகள் முந்தைய மாடலை விட ரூ. 39 ஆயிரம் முதல் ரூ. 1.12 லட்சம் வரை விலை உயர்வை சந்தித்துள்ளன.
பிஎஸ்6 இன்னோவா கிறிஸ்டா காரின் இரண்டு டூரிங் ஸ்போர்ட் பெட்ரோல் ட்ரிம்கள் முந்தைய மாடலை விட ரூ. 11 ஆயிரம் வரை விலை உயர்வு பெற்றுள்ளன. டீசல் டூரிங் ஸ்போர்ட் ட்ரிம்கள் ரூ. 39 ஆயிரம் வரை விலை உயர்வை பெற்றுள்ளன.
முதலில் முன்பதிவு செய்யும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விலை பொருந்தும் என்று டொயோட்டா கூறியுள்ளது. விரைவில் இந்த விலையில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.