தை வழி என்று கூறுவதை விட ஒரு சிறிய முன்னெச்சரிக்கை அல்லது கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்திக் கொள்ளும் ஒரு செயல் என்று கூறினால் நன்றாக இருக்கும்! நீங்கள் ஜியோ பயனராக இருந்தாலும் சரி, அல்லது பிஎஸ்என்எல் பயனராக இருந்தாலும் சரி.
நாளை முதல் அறிவிக்கப்படவுள்ள கட்டண உயர்விற்கு முன்பாகாவே ஒரு அட்டகாசமான மற்றும் நீண்ட கால ப்வேலிடிட்டியை வழங்கும் ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்து, அதை ரீசார்ஜ் செய்து கொண்டால் அடுத்த மூன்று அல்லது ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு காலம் வரையிலாக உங்களுக்கு எந்த கவலையும் இருக்காது. மேலும் அறிவிக்கப்படவுள்ள புதிய கட்டண உயர்வானது உங்களை எந்த வகையிலுமே பாதிக்காது!
"அட இது நல்ல யோசனையாக இருக்கிறதே?" என்பவர்களுக்கு, எந்த திட்டத்தை தேர்வு செய்வது என்பது குழப்பம் இருப்பின், இங்கே தொகுக்கப்பட்டுள்ள சிறந்த நீண்டகால ப்ரீபெய்ட் திட்டங்களை (ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல்) சரிபார்க்கவும். பின்னர் அதிலொன்றை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்து புதிய கட்டண உயர்வில் இருந்து எஸ்கேப் ஆகிக்கொள்ளவும்!